வந்தியத் தேவன்
வந்தியத் தேவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணர்குல இளவரசன் ஆவார். வரலாற்றில் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார். ஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் தூதுவனாக வதியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவையைக் காண வந்தியத்தேவன் முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்யக் கூறுகிறான். அந்த வேளையில் ஆழ்வாா்க்கடியான் எனப்படும் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமித்தகாரன் என்று ஊரார் நம்பும்படி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான். ஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்தது, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசா் அருள்மொழி வா்மரும் தானும் கடலில் ...