Posts

Showing posts from October, 2022

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல பட்டத்து இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற ஆதித்த கரிகாலனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. கதாப்பாத்திரத்தின் இயல்பு சுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் குந்தவைக்கு ஓலை ஆதித்த கரிகாலனுக்கு வாணர் குல வீரன் வந்தியத்தேவனும், பார்த்திபேந்திர_பல்லவனும் நண்பர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் வந்தியத்தேவனிடம் தன்னுடைய தங்கை குந்தவைக்கு ஒரு ஓலை கொடுத்தனுப்புகிறான் ஆதித்த கரிகாலன். காஞ்சியில் பொன்மாளிகை ஒன்றினைக் கட்டியிருப்பதாகவும் தஞ்சையில் இருக்கும் தன் தந்தை சுந்தர சோழரை அப்பொன்மாளிகைக்கு வந்து தங்கும்படியும் எழுதி அனுப்பியிருக்கிறான். நந்தினியுடன் காதல் ஆதித்த கரிகாலன் சிறுபிராயத்திலிருந்தே...

நந்தினி

Image
நந்தினி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்ட பழுவூர் இளையராணி ஆவாள். கதாபாத்திரத்தின் இயல்பு நந்தினி வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள். மதுராந்தகனுக்கு ஆசையூட்டுதல் கண்டராதித்தரின் மகனான மதுராந்தத் தேவன், சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அரச பதவிகளில் நாட்டம் இன்றி இருந்தவரை நந்தினி சந்தித்து மன்னராகும் தகுதி மதுராந்தகனுக்கே உண்டு என்று மனம் மாற்றம் செய்கிறாள். அதனால் மதுராந்தகன் சிவ பக்தியை துறந்து நாடாள வேண்டி சிற்றரசர்களின் ரகசிய கூட்டத்தினைக் கூட்டுகிறான். அதில் மதுராந்தகன் கலந்து கொள்ள ஏதுவாக தன்னுடைய பல்லக்கினை தருகிறாள் நந்தினி. சகோதரன் நந்தினி தேவியின் அண்ணன் திருமலை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டரையரை நந்தி...

சுந்தர சோழர்

Image
சுந்தர சோழர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழப் பேரரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற சுந்தர சோழரை சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. பிறப்பும் வளர்ப்பும் அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர். சிறு பிராயத்துப் பிள்ளையாக இருக்கும் போதே ஈழத்துப் போரில் கலந்து கொண்டார். அவரைப் பற்றிய செய்திகள் தஞ்சைக்கு கிடைக்காமல் போனமையினால், கவலை அடைந்திருந்தனர். சுந்திர சோழரின் பெரிய தகப்பனார் இராசாதித்த தேவர் இரட்டை மண்டல படையை எதிர்த்து வீரமரணம் அடைந்தார். அரிஞ்சயத் தேவர் படுகாயமடைந்திருந்தார். அதனால் சோழப்பேரரசினை விருப்பமே இன்றி சிவபக்திமானான கண்டராதித்தர சோழர் நிர்வகித்தார். பராந்தக சோழருக்கு கண்டராதித்தரின் மனநிலை தெரிந்திருந்தது. அரசாங்க விசயங்களில் ஈடுபாடில்லாமல் எப்போதும் சிவபக்தியில் இருப்பவர் கண்டராதித்தர். அப்போது ஈழத்தில் சுந்தர சோழரை ஒரு தீவில் கண்டுபிடித்து தஞ்சைக்கு அழைத்து வந்தார்கள் வீரர்கள். இறக்கும் தருவாயில் இருந்த பராந்தக சோழர் சுந்திர சோழருக்கு இளவரசர் பட்டம் கட்டவேண்டுமெனவும், அவருடைய வாரிசுகளே சோழதேசத்தினை ஆள வேண்டுமெனவ...

அருள்மொழிவர்மன்

Image
அருள்மொழிவர்மன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராசராச சோழனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. கதாப்பாத்திரத்தின் இயல்பு சுந்தர சோழரின் மகனாகவும், ஆதித்த கரிகால சோழன் மற்றும் குந்தவை தேவியின் தம்பியாகவும் அருள்மொழிவர்மன் வருகிறார். ஓவிய, சிற்ப கலைகளை அலாதியான விருப்பம் கொண்டவராகவும், யானைகளின் மொழியை புரிந்தவராகவும், மதம் கொண்ட யானையை இலகுவாக கட்டுப்படுத்தும் திறன் வாய்த்தவராகவும் இருக்கிறார். அரச காரியங்களில் ஈடுபடும் போது நண்பர்களின் கருத்துகளையும், மந்திரிகளின் ஆலோசனைகளையும் அறிந்து முடிவெடுப்பவராகவும், பெரியவர்களின் சொற்படி நடப்பவராகவும் அருள்மொழிவர்மனின் கதாப்பாத்திரத்தினை கல்கி அவர்கள் செதுக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் சிறுபிராயத்தில் அருள்மொழிவர்மன், இளைய பிராட்டி குந்தவை நாச்சியார், ஆதித்த கரிகாலன், இவர்களது தந்தை சுந்தர சோழர் மற்றும் தாய் மலையமான் குமாரி ஆகியோர் காவிரி நதியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கையி்ல் அருள்மொழிவர்மன் படகிலிருந்து தவறி விழுந்துவிடுகிறார். அவரை காப்பாற்றி ம...

குந்தவை

Image
குந்தவை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ இளவரசி ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற குந்தவை நாச்சியாரை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. கதாப்பாத்திரத்தின் இயல்பு சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் தமக்கையாகவும் வருகிறாள். செம்பியன் மாதேவி கோவில்களுக்குத் திருப்பணி செய்வதைப் போல, மருத்துவ சாலைகள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்குமான உதவிகளைக் குந்தவை செய்கிறாள். இதற்கு சுந்தர சோழர் நோயுற்று இருந்தமையினால் குந்தவை மனதில் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று பொன்னியின் செல்வனில் கல்கி கூறுகிறார். சுயமாக வாழவும், சுதந்திரமாக இருக்கவும் விரும்பும் பெண் என்பதால் பழையாறையில் செம்பியன் மாதேவியோடு வசிக்கிறாள். வானதியை அருள்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பதையும், நந்தினியின் சதிகளை முறியடிக்க சிரத்தை எடுப்பதையும் பார்க்கையில் குந்தவையை நவீன பெண்ணியத்தின் குறியீடாக கல்கி செதுக்கியிருப்பது தெரிகிறது. பராந்தக சுந்தரசோழா் செம்பியன் மாதேவி அநிருத்தா் அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோா் மட்டுமல்லாமல் சோழ ...

வந்தியத் தேவன்

Image
வந்தியத் தேவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணர்குல இளவரசன் ஆவார். வரலாற்றில் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார். ஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் தூதுவனாக வதியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவையைக் காண வந்தியத்தேவன் முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்யக் கூறுகிறான். அந்த வேளையில் ஆழ்வாா்க்கடியான் எனப்படும் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமித்தகாரன் என்று ஊரார் நம்பும்படி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான். ஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்தது, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசா் அருள்மொழி வா்மரும் தானும் கடலில் ...

Plot summary

The story revolves around Vandiyathevan, a charming, brave and brilliant young man who sets out across the Chola land to deliver a message from the Crown Prince Aditha Karikalan to the King and the Princess. The story shuttles between Vandiyathevan's travels in Chola country and the young Prince Arulmozhivarman's (later known as Raja Raja Chola) travels in Sri-Lanka. The narrative deals with attempts by his sister Kundavai to bring back Arulmozhivarman to establish political peace in a land seemingly beset with unrest and civil war plotted by vassals and petty chieftains. Parantaka Chola was succeeded by his second son Gandaraditya as the first son Rajaditya had died in a battle. At the time of Gandaraditya's death, his son Maduranthaka was a two-year-old child and hence Gandaraditya’s brother Arinjaya ascended the throne. After Arinjaya’s death, his son Parantaka II (Sundara Chola) was crowned. He had two sons, Adithya Karikalan, Arulmozhivarman, and a daughter named Kunda...